விண்வெளியில் இந்தியாவின் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 52 உளவு செயற்கைக் கோள்களை அனுப்ப மத்திய அமைச்சரவையின் செலவு கணக்கீட்டு குழு முடிவு செய்துள்ளது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், விண்வெளியில் இருந்து கண்காணிக்கும் திறனை இந்தியா அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.