பிரான்சில் சர்ச்சைக்குறிய தீவிர வலதுசாரி அரசியல் தலைவரான ஜீன் மேரி லே தனது 96 வயதில் காலமானார். வலதுசாரி தேசிய முன்னணி கட்சியின் நிறுவனரான இவர், இனவெறி மற்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்குகள் காரணமாக பலராலும் வெறுக்கப்பட்டார். இந்நிலையில், ஜீன் மேரி லேவின் மறைவை அவரது எதிர்ப்பாளர்கள் நடனமாடி கொண்டாடினர்.