அமோனியா வாயுகசிவு ஏற்பட்டு மூடப்பட்ட எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையை மீண்டும் திறக்க, மீனவ கிராமங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாக பகீர் புகார் எழுந்துள்ளது.பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனையை காற்றில் பறக்க விட்ட கோரமண்டல் ஆலை நிர்வாகம், திமுக எம்.எல்.ஏ., கே.பி.சங்கரையே வைத்து கிராம மக்களை விலைக்கு வாங்கியதாக அதிர்ச்சி புகார் கூறப்படுவது, மீனவ மக்களின் பாதுகாப்பை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.அமோனியா வாயு கசிவு பாதித்து துடிதுடித்த கோர காட்சிகளின் தாக்கம் மறையும் முன்பே, திரை மறைவில் கோரமண்டல் நிறுவனம் கோடி கோடியாக பணத்தை கொடுத்து ஆலையைதிறக்க முயற்சிப்பது மீனவ கிராமங்களை மரண பயத்தில் ஆழ்த்தி நடுநடுங்க வைத்துள்ளது.சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா கசிவு ஏற்பட்டு மொத்த மீனவ கிராமமும் துடிதுடித்து, மயங்கி விழுந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது...! இதற்கு பிறகு கடும் எதிர்ப்பு எழவே, கோரமண்டல் ஆலை மூடப்பட்டது. பின்னர், தாமாக முன்வந்து விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கோரமண்டல் ஆலையை நிபந்தனையுடன் திறக்க உத்தரவிட்டது.