கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வார இறுதி விடுமுறை கழிக்க தோழிகள் மூன்று பேர் RESORTக்கு சென்றிருந்த நிலையில் நீச்சல் குளத்திலே உயிரிழந்தனர். காப்பாற்ற யாருமே வராமல் மூன்று இளம்பெண்களும் துடிதுடித்து உயிரை விட்ட கடைசி நிமிட சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவரின் மனதை உலுக்கியது.RESORTக்கு சென்ற மூன்று இளம்பெண்களுக்கு வார இறுதி நாள், வாழ்கையின் இறுதி நாளாகவே முடிந்தது....! கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள VAZCO BEACH RESORTக்கு வார விடுமுறையை கொண்டாட 2K KID களான மூன்று இளம்பெண்கள் சென்றனர். மூன்று இளம்பெண்களும் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கி விடுமுறையை உற்சாகத்துடன் கழித்து வந்த நிலையில் மூவரும் அதே ரிசார்ட்டில் உள்ள SWIMMING POOLக்கு குளிக்க சென்றனர். சுற்றி ஆட்கள் நடமாட்டமே இல்லாத நீச்சல் குளத்தில் இறங்கி இளம்பெண்கள் உற்சாகத்துடன் குளித்து வந்தனர். இதனையடுத்து பெண் ஒருவர் குளத்தில் இருந்த டியூப்பை எடுக்க சென்றார். அங்கு ஆழம் அதிகமாக இருந்ததால் திரும்பி சென்ற அவர் மற்ற பெண்களையும், அழைத்து மீண்டும் டியூப்பை எடுக்க முயன்றார். அப்போது ஆழத்தில் நிலை தடுமாறிய பெண் நீச்சல் குளத்தில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற இரு பெண்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாத மூன்று பெண்களும் குளத்திலிருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு தவியாய் தவித்தனர். நீச்சல் குளத்தை சுற்றி ஆட்கள் நடமாட்டமே இல்லாத நிலையில் துடிதுடித்து 3 பெண்களும் நீரிலே உயிரை விட்ட சிசிடிவி காட்சிகள் பார்ப்பவரின் மனதை உலுக்கியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரிசார்ட் மேலாளர் மற்றும் உரிமையாளரை கைது செய்தனர். ரிசார்ட்டுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நீச்சல் அடிக்க தேவைப்படும் பாதுகாப்பு உபகரணமான ஜாக்கெட் கூட அணியாமல் மூன்று பெண்களும் குளித்த விபரீதத்தால்தான் இந்த விளைவு..பல ஆசைகளோடு மகிழ்ச்சியாய் ரிசார்ட்டுக்கு வந்த இளம்பெண்களுக்கு அந்த விடுமுறை நாள் உயிரை பறித்த எமனின் பாச கயிறாகவே அமைந்தது.