தெற்கு பிரேசிலை சூறையாடிய கொடிய சூறாவளியில், ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 750க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொடிய சூறாவளியில், ரியோ போனிடோ டோ இகுவாகு ( Rio Bonito do Iguacu) பகுதி முழுவதும் தரை மட்டமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றன் மேல் ஒன்றாக கார்கள் குவிந்து கிடப்பதையும், வீடுகளின் கூரைகள் சிதறிக் கிடப்பதையும், இடிபாடுகளிலிருந்து மக்கள் தங்கள் உடமைகளை மீட்டெடுப்பதையும் காட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.