ராபின்ஹுட் திரைப்படத்தில் நடிக்க, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சிறிய கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு, தெலுங்கு சினிமாவில் இதுவரை யாரும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என கூறப்படுகிறது.