டானா புயல் எதிரொலியாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பபடுகிறது.