திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசமரத்தின் கிளைகள் உடைந்து விழுந்ததில் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மற்றும் சுவர் சேதமடைந்தது. உதயேந்திரம் பேரூராட்சி 15-வது வார்டில் வசிக்கும் சின்னத்தம்பி, குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், மரக்கிளை உடைந்து விழுந்ததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.