"அழகு மலர்" எனும் பெயர் கொண்ட ’மோன்தா’ புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது, கனமழையும் கொட்டித் தீர்த்தது. மேலும், புயல் தாக்கியதால் ஆந்திர மாநிலத்தின், காக்கிநாடா கடற்கரை பகுதி சேதமடைந்த நிலையில், தென்னை மரத்தை கடலுக்குள் இழுத்து வரும் அளவிற்கு ஆக்ரோஷமாக அலைகள் எழுந்தன. இது ஒருபுறம் இருக்க, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க ஆந்திராவில் 800க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதையும் பாருங்கள்... புயல் கடந்து வந்த பாதை, புயலாக உருவானது முதல் ஆந்திராவை கலங்கடித்தது வரை | Montha cyclone