சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்துவதே உண்மையான பணி என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அந்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட கடாஃபி மைதானதின் திறப்புவிழாவில் பேசிய பிரதமர் ஷபாஸ் ஷெரிப், எங்கள் அணி சிறப்பாக உள்ளது என்றும், சமீபத்தில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், பெருமிதம் தெரிவித்தார்.