முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பும்ரா விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்.