தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் செயலாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரியுமான காசி விஸ்வநாதனை பாராட்டி அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அவருக்கு Hall Of Fame என்ற விருது வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.