பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியதற்காக, ரோகித் சர்மா, விராட் கோலியை விமர்சிப்பது சரியல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 5- 6 ஆண்டுகளில் இந்திய அணி புரிந்த சாதனைகளை போல் வேறெந்த அணியும் சாதிக்கவில்லை எனக் கூறிய அவர், அவற்றை எல்லாம் மறந்து விட்டு நமது வீரர்களை பற்றி தவறாக பேசி வருவதாகவும், விமர்சனம் செய்வது மிகவும் எளிது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.