குற்றகரமான வகையில் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் ஒட்டுநரின் குடும்பத்திற்கு, வாகன காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. சாகசம் செய்யும் விதமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டு, அதனால் மரணம் நிகழ்ந்தாலும் இழப்பீடு வழங்க வேண்டாம் என வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது போன்ற விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு தாக்கலான மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த து சரியானதே எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.