திடீரென உங்கள் முன், லட்சக்கணக்கான நண்டுகள், அங்கும் இங்கும் ஆக உலா வருவதை, பார்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பயம் கலந்த பதற்றமும் லேசான குழப்பமும் அடைவீர்கள் அல்லவா? ஆனால், ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த பயமே இல்லை.ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்துமஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் போது, அங்குள்ள மலைப் பகுதிகளில் வாழும் சுமார் 5 கோடி சிவப்பு நண்டுகள், தங்கள் அடர்ந்த காடுகளை விட்டு கடற்கரையை நோக்கி புறப்படுகின்றன. அப்போது, சாலை முழுவதும் அடர்ந்த சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும். இந்த நண்டுகள் காடுகளில் இருந்து சுமார் 8 முதல் 10 கிமீ தூரம் நடந்து சென்று, கடற்கரையில் சிறிய குழிகள் தோண்டி முட்டை இடுகின்றன. இது ஒரு நீண்ட தூர இனப்பெருக்கப் பயணம் ஆகும்.நண்டுகளின் இந்த பயண காலம் தொடங்கும் போது, அவற்றின் உயிருக்கு ஆபத்து நேருவதை தடுக்க அப்பகுதி காவலர்கள் மற்றும் அதிகாரிகள், சாலைகளை தற்காலிகமாக மூடி வைத்து விடுவர். அந்த வழியாக நண்டுகள் கடந்து செல்லும் வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. இன்னும் சில இடங்களில் நண்டுகள் எளிதாக சாலையை கடக்க சிறு சிறு பாலங்களும் கட்டி வைக்கப்படுகின்றன. இந்த சிவப்பு நண்டுகள் சாலைகளை கடக்கும் காட்சி, உலகம் முழுவதும் உள்ள இயற்கை நேசர்களின் மனதை கவர்ந்துள்ளது. இயற்கை தந்த கொடை...