பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.பெண் நடன கலைஞர் அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலங்கானா போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தெலங்கானா நீதிமன்றம், தேசிய விருது வாங்குவதற்காக ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும், ஜாமின் பெறுவதற்கு 2 லட்சத்திற்கான உத்தரவாதத்தை இருவர் அளிக்க வேண்டும், ஊடகங்களில் பேட்டி எதுவும் கொடுக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.