தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது FIR பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்தனர் என JSP என்ற அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூருவில் புகார் அளித்தார். தேர்தல் பத்திரங்களை வாங்கி கட்சிக்கு நிதி அளிக்குமாறு கார்ப்பரேட் நிறுவனங்களை இவர்கள் கட்டாயப்படுத்தினர் என்றும் இல்லை என்றால் ED சோதனை நடத்தப்படும் எனவும் இவர்கள் மிரட்டியதாக புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டது.சட்டவிரோத பணத்தை அரசியல் பயன்பாட்டுக்கு பயன்படுத்த தேர்தல் பத்திரம் கொண்டுவரப்பட்டதாவும், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு இதில் பங்கு உண்டும் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.