மனிதர்களை அடையாளப்படுத்த அவர்களின் பெயர்களைக் கொண்டு அழைப்பது போல, ஒரு இடத்தின் அடையாளமும் அதன்பெயரைக் கொண்டு அழைப்பதன் மூலமே தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் உலக நாடுகள் பெரும்பாலும் அதன் சுருக்கமான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அதற்கு உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் சற்று நீளமானதாக இருக்கும். அந்த வகையில் உலகில் மிக நீளமான பெயரைக் கொண்ட நாடு எது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பாக்கலாம். உலகில் மிக நீளமான பெயரைக் கொண்ட நாடாக முதல் வரிசையில் பிரிட்டன் இருந்து வருகிறது. இதனுடைய அதிகாரப்பூர்வ பெயர் THE UNITED KINGDOM OF GREAT BRITAIN AND NORTHERN IRELAND என்பதாகும். இதில் 48 எழுத்துக்களுடன் இருப்பதால் இதனை நீளமான பெயரைக் கொண்ட நாடாக சொல்லப்படுகிறது. இரண்டாவது இடத்தில் கிரிபாட்டி நாடு உள்ளது. இந்த நாடு மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த ஒரு தீவு ஆகும். இதன் உண்மையான பெயர் INDEPENDENT AND SOVEREIGN REPUBLIC OF KIRIBATI என்பதாகும். இதில் 41 எழுத்துக்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதேபோல் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாவோ டோம் என அழைக்ககூடிய தீவு அதிகாரப்பூர்வமாக Democratic Republic Of São Tomé And Príncipe என்பதாகும் .இதில் 38 எழுத்துக்கள் இருப்பதால் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதேபோல் ஸ்ரீலங்கா என்று நாம் ஆங்கிலத்தில் அழைக்கும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA என்பதாகும். இதில் 37 எழுத்துக்களுடன் நான்காவது இடத்திலும் , தென் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மாசிடோனியா அதிகாரப்பூர்வமாக The Former Yugoslav Republic of Macedonia என்பதாகும், இதில் 36 எழுத்துக்களுடன் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.