பிரேசிலின் Rio de Janeiroவில் கடற்கரையில் திமிங்கலம் ஒன்று சடலமாக ஒதுங்கியது. Barra da Tijuca பீச்சில் ஹம்பேக் திமிங்கலம் சடலமாக கரை ஒதுங்கியதை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திமிங்கலத்தின் மரணத்தை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டதோடு, அடக்கம் செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் டிரக்கில் உடல் எடுத்து செல்லப்பட்டது.