டெல்லியில் அமைதியான முறையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. டெல்லியில் பாஜக ஆட்சியமைக்கக் கூடும் என்றும்,ஆம் ஆத்மி கடும் போட்டியாளராக உருவாகக் கூடும் எனவும், பெரும்பாலான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.