சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், இதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நோட்டீஸ் வழங்கியும் 7 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.