மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மகாவிஷ்ணு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனர். இந்நிலையில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் பின்னணி மற்றும் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.