சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வரும் உலகின் நட்சத்திர கால்பந்து வீரரான ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அதனை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இது தொடர்பாக ரொனால்டோ வெளியிட்டுள்ள பதிவில், "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும், அதே பேரார்வம், அதே கனவுகளுடன் இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.