தென்காசி: சங்கரன்கோவிலில் கனமழை காரணமாக சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி: திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாக சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.