தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று மாலை மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, திருவேங்கடம் சாலையில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து தேங்கியதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை:தொடர் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆக்ரோஷமாக கொட்டும் தண்ணீர், குற்றாலம் சுவாமி சன்னதி பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த கனமழை:தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். ஒரத்தநாடு, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஈச்சன்விடுதி, திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடைவிடாமல் மழை பெய்ததால் கடைவீதிக்கு வந்த மக்கள் அவதியுற்றதோடு, வியாபாரிகளும் விற்பனை இல்லாமல் வேதனை அடைந்தனர்.