இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அந்நாட்டு போலீசார் மூவரை கைது செய்தனர். Arugam Bay பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை ரிசார்ட்டில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, இந்திய உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்ததாகவும், அதன் பேரில் சந்தேகத்துக்கு இடமாக தென்பட்ட உள்ளூர்வாசிகள் மூவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்களும், பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.