பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது தொடர்பான வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. வழக்கில் வந்த சுகா என்ற நபரை பானிபட்டில் வைத்து கைது செய்த போலீசார், பின் மும்பைக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் சல்மான் கானை கொலை செய்ய ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலும், 25 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதும், கொலையை அடங்கேற்ற AK 47, AK 92, M 16 போன்ற அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தானில் ஆர்டர் செய்ததும் தெரியவந்துள்ளது. சல்மான் கானைக் கொல்ல புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியதோடு, கொலையை கச்சிதமாக முடிக்க சல்மான் கானின் ஒவ்வொரு அசைவுகளும் 70க்கும் மேற்பட்ட கூலிப்படைகளால் கண்காணிக்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.