காங்கிரஸ் கட்சி, முஸ்லீம்களை ஒரு வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய அவர், காங்கிரஸ் கட்சி இந்துகளை பிளவுபடுத்துவதுடன் முஸ்லீம்களை தாஜா செய்வதாகவும் கூறினார்.முஸ்லீம்களின் 15 சதவிகித வாக்குகள் தங்களுக்கு எப்போதும் உண்டு என தேர்தல் காலங்களில் காங்கிரஸ் கூறுவதில் இருந்து அதன் மனப்பாங்கு புரிவதாக கிரண் ரிஜிஜு கூறினார். இது முஸ்லீம்களுக்கு ஒரு பெரும் இழப்பு என்ற அவர்,காங்கிரசின் பிரித்தாளும் அரசியலுக்கு இந்துகளும், வாக்கு வங்கியாக முஸ்லீம்களும் பலியாக கூடாது என தெரிவித்துள்ளார்.