மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் மோடி பதிலுரை வழங்காத நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அவைக்கு வராதது ஏன்?நொடிக்கு நொடி அனல் கிளப்பிய பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதும் போல் அல்லாமல், 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பிரதமரின் உரையின்றி மக்களவையில் நிறைவேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த மோடி, அவைக்கு வராதது ஏன்? என்ற கேள்விக்கு சபாநாயகர் அளித்த பதில் பேரதிர்ச்சியாக இருந்தது.பிரதமர் வராமலேயே...இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு, எஃப்டீன் ஃபைல்ஸ், அமெரிக்கா உடனான இந்திய வர்த்தக ஒப்பந்தம் போன்ற நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் விவகாரங்களை கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல்தெறிக்க வைக்கும் விவாதங்களையும் பரபரக்க வைக்கும் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில்தான், புதனன்று மாலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸை சேர்ந்த ஜோதிமணி, சுதா மற்றும் சில பெண் எம்பிக்கள் சரியானதை செய்யுங்கள் என்ற பேனரை ஏந்தி பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் பிரதமர் வராமலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.பிரதமர் மக்களவைக்கு ஏன் வரவில்லை?தொடர்ந்து, வியாழக்கிழமையான நேற்று, பிரதமரின் உரையின்றி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்ததும் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் பயப்படுவதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், பிரதமர் மக்களவைக்கு ஏன் வரவில்லை? என்று சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த விளக்கம் நாடுமுழுவதும் பூதாகரத்தை கிளப்பியது. சபாநாயகர் விளக்கம், அதிர்ச்சி பிரதமர் மோடி குடியரசுத் தலைவரின் உரைக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று, தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகவும் இந்த காட்சியை தாம் புதனன்றே சபையிலேயே பார்த்ததாகவும் ஓம்பிர்லா தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்திற்குள் நிலவும் குழப்பத்தால் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சிதைக்கும், விரும்பத்தகாத காட்சியாக இருந்திருக்கும் என்றார். இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு தாம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார்.அரசு தயாராக இல்லை - பிரியங்கா காந்தி இதுதொடர்பாக விமர்சனத்தை முன்வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவைக்கு வர பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை எனவும் பிரதமர் இருக்கைக்கு முன்னால் வெறும் 3 பெண் எம்பிக்களே நின்று கொண்டிருந்ததாகவும் சபாநாயகரின் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருப்பதாகவும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மேலும், நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடத்த மத்திய பாஜக கூட்டணி அரசு தயாராக இல்லை எனவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.எதிர்க்கட்சியினர் விமர்சனம் சபாநாயகர் ஓம்பிர்லா கூறுவது கட்டுக்கதை என்று ஜோதிமணியும் அப்பட்டமான பொய் என்று சுதாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தி பேசினால் பிரதமர், பாஜகவினர் பதற்றம் அடைவது ஏன்? என்றும் காங்கிரஸ் எம்பி சுதா வினவியுள்ளார். பிரதமரை தாக்க திட்டமிட்டிருந்ததாக அபாண்டமாக பேசியிருக்கும் ஓம் பிர்லாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்றார். Related Link இன்றைய ராசி பலன்கள் 06022026