பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள கருப்பு கொடி போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்புவிடுத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி கொடுக்காததை கண்டித்தும், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தர வேண்டிய நிதியை தராததை கண்டித்தும், இலங்கை கடற்படை அத்துமீறி தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்தும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.