இந்தியாவின் 90ஆவது மற்றும் தமிழகத்தின் 35ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை, சென்னையைச் சேர்ந்த 16 வயதான இளம்பரிதி பெற்றுள்ளார். போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் (Herzegovina) நடந்த செஸ் போட்டியில், இளம்பரிதி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், இப்போட்டியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான 2500 elo புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், இளம்பரிதிக்கு இந்தியாவின் 90ஆவது மற்றும் தமிழகத்தின் 35ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்து கிடைத்தது. செஸ் கிராண்ட் மாஸ்டரான இளம்பரிதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி பாராட்டு:தமிழகத்திற்கும், இந்திய சதுரங்கத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் மற்றொரு பெருமைமிக்க தருணம்.இந்தியாவின், 90ஆவது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 35ஆவது கிராண்ட் மாஸ்டராகவும் ஆன இளம்பரிதி A Rக்கு வாழ்த்துக்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:தமிழ்நாட்டின் 35ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி பிரகாசிக்கிறார்.வரலாற்றில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி, தனது பட்டத்தைப் பெற்று, தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது, திராவிட மாடல் ஒவ்வொரு நம்பிக்கைக்குரிய நகர்வையும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மாற்றும். இன்னும் பல தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - 16 வயதில் கிராண்ட் மாஸ்டர், சென்னையை சேர்ந்த இளம்பரிதி சாதனை | India’s 90th chess GM Ilamparithi