தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உதயநிதியின் பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் தனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்வதாக வாழ்த்தியுள்ளார்.