தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து வரும் 24 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கையில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக குற்றம் புரிவது வாடிக்கையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய இபிஎஸ், அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் வரும் 24ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.