தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் முருகன் கோயில் வாசலில் படுத்திருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டியடித்தாக கூறி, பெண் பக்தர் சாமியாடியடி ஊழியருக்கு சாபமிடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமி தரிசனம் செய்வதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலின் வாசல் முன்பு படுத்திருந்ததாக கூறப்படுகிறது.