மும்பையை சேர்ந்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் எக்ஸ் பதிவால் ஓலா நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஓலா ஸ்கூட்டர்கள் சர்வீஸ் சென்டர் அழுக்கு படிந்து குப்பைகள் போல உள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் தான் பாவம் என குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் குணால் கம்ரா, அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வாலையும் டேக் செய்திருந்தார். இதனால் கடுப்பான பவிஷ் அகர்வால், உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், இங்கே வந்து உதவி செய்யுங்கள், நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக தருவதாக குறிப்பிட்டிருந்தார். இருவருக்கும் எக்ஸ் பக்கத்தில் வார்த்தை போர் முட்டிய நிலையில், ஓலா நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.