இமாச்சல பிரதேசம் சிம்லா சஞ்சவுலியில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் கட்டப்படுவதாக எழுந்துள்ள புகாரில், சட்டவிரோத கட்டுமானம் என கூறப்படும் அந்த பகுதியை இடித்து விட தயார் என முஸ்லீம் தரப்பினர் சிம்லா மாநகராட்சி ஆணையரிடம் உறுதி அளித்துள்ளனர். ஆணையரை சந்தித்த அவர்கள், சட்டவிரோதமானது என கருதப்படும் கட்டிடத்தை சீல் வைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர்.பள்ளிவாசலின் இமாம் மற்றும் வக்பு போர்டு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் சிம்லா ஆணையரை சந்தித்து இதை தெரிவித்தனர்.சஞ்சவுலியில் வசிக்கும் முஸ்லீம்கள் இமாச்சலின் பூர்வீக மக்கள் என்றும் அங்கு சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் காப்பாற்றப்பட தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.