எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கும் உட்படுத்த தயார் என திண்டுக்கல்லை சேர்ந்த A.R. டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.இதனையடுத்து, திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக கூறி, A.R. டெய்ரி நிறுவனத்திடம் நெய் வாங்குவதை தேவஸ்தானம் நிறுத்தியுள்ளது.இதுதொடர்பாக,A.R. டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு நிர்வாகி கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, தாங்கள் தரமான நெய் தயாரித்து வருவதாகவும், திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார்.