தெலுங்கானா மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவரை பாஜக எம்.பி. கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போச்சாரம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஈட்டல ராஜேந்தரிடம், மக்கள் அங்கிருந்த புரோக்கர் ஒருவரை காண்பித்து, அவர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த எம்.பி., புரோக்கரை அறைந்தார்.