திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற ஒன் டூ ஒன் சந்திப்பு நிகழ்ச்சியின் வாயிலாக, 100 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற ஒன் டூ ஒன் சந்திப்பு மூலம் புவனகிரி, கடலூர், மயிலம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை நடந்த சந்திப்பில், ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், 100 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், அரசு சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகள் என பிரிக்கப்பட்டு தீர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.