நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் 4 நாட்களில் 140 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியான 3 நாட்களில் சிவகார்த்திகேயன் படம் ரூபாய் 100 கோடி வசூல் என்ற இலக்கை அடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் அமரன் திரைப்படம் 7 புள்ளி 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.