அமலாக்கத் துறையும், வங்கிகளும், தன்னிடம் இருந்து இரு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்துள்ளதால், சட்டப்பூர்வமாக நிவாரணம் பெற முயற்சிப்பேன் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். மொத்த கடன் 6 ஆயிரத்து 203 கோடி ரூபாய் என்றிருக்க, அரசு தன் சொத்துக்களை விற்று 14 ஆயிரத்து 131 கோடி ரூபாயை வசூலித்த பிறகும், தன்னை பொருளாதார குற்றவாளி என கூறுவதாக தெரிவித்தார்.