இமாச்சல பிரதேசத்தில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கு சென்று விட்டதால் மலைவாசஸ்தலமான தரம்சாலா கடும் குளிருடன் பனிமயமாக மாறியுள்ளது. தரம்சாலா நகரம் இருக்கும் தவுலாதர் மலைகளை பனிக்குவியல் மூடியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்ததை தொடர்ந்து தரம்சாலாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிர் நிலவுவதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.