தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு கண்டித்துள்ள நிலையில், தமிழக அரசும் காவல்துறையும் தோல்வியடைந்துவிட்டது என சாடியுள்ளார்.