வினோதமான உணவுன்னு யோசிச்சாலே நம்ம மூளைக்கு வர்ற முதல் நாடு, சீனா-தான். சீனாவுல விற்பனையாகி வரும் கரப்பான் பூச்சி காஃபி-தான் இப்போ இணையவாசிகள் மத்தியில பேசுபொருளாகியிருக்கு. இதை கேட்கும்போதே பலருக்கும் ஒரு வித அருவருப்பான Feel வந்திருக்கும். ஆனா, இந்த காஃபியில எக்கச்செக்க நன்மைகள் இருப்பதா சீன மருத்துவத்துல சொல்லப்படுது. சீனாவின் பெய்ஜிங் மாகாணத்துல அமைந்துள்ள பூச்சி அருங்காட்சியகத்துல தான் இந்த கரப்பான் பூச்சி காஃபி விற்பனை செய்யப்பட்டு வருது. இந்த ஸ்பெஷல் காஃபில கரப்பான் பூச்சி பொடி மற்றும் காய வைத்த கோதுமைப் புழுக்கள் கலக்கப்பட்டு, தரப்படுகிறது. ஒரு கப் காஃபி, 45 யுவான் அதாவது இந்திய மதிப்புல 559 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருது. “இது ஒரு Insect Themed அருங்காட்சியகம் என்பதால, இங்க விற்கப்படும் உணவு பொருட்களும், அதுக்கு ஏற்ற மாதிரி இருக்கணும்னு நினைச்சோம். அதனால தான் இந்த ஸ்பெஷல் கரப்பான் பூச்சி காஃபியை தயாரிச்சோம். இளைஞர்களுக்கு இந்த காஃபி ரொம்பவே புடிச்சிருக்கு” அப்படீன்னு அருங்காட்சியக அதிகாரி தெரிவிச்சிருக்காரு.