கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைவராக இன்ஸ்பெக்டர் ஜெனரல் தத்விந்தர் சிங் சைனி பொறுப்பேற்றுள்ளார். கடலோர காவல்படை மண்டலத்தின் கமாண்டராக இருந்த டோனி மைக்கேல் விசாகப்பட்டினம் ஏடிஜி-யாக பதவி உயர்வு பெற்றார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெனரலான தத்விந்தர் சிங் சைனி தற்போது கடலோர காவல்படையில் கிழக்கு பிராந்திய தலைமைப் பதவியேற்றுள்ளார். இந்திய கடலோர காவல்படையில் 1990-ம் ஆண்டு சேர்ந்த தத்விந்தர் சிங் சைனி, மும்பையில் கடலோர காவல்படையின் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.