news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறார் CM விஜய்
tv

Also Watch

tv

Read this

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறார் CM விஜய்

களை கட்டிய அரங்கம்

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முதலமைச்சர் விஜயால் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா இன்று ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை அறிமுகம் செய்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்.



சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில், சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் என தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தார் முதலமைச்சர் விஜய். இதன்படி, கடந்த மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், மேடையிலேயே மக்கள் முன்பு 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான், பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்.

பொது மக்கள் கூடும் இடங்களில்...
முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மற்றும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுமே ஆகும். போலீஸ் ஐஜி கே.பவானீஸ்வரியை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைவராக நியமித்தும், சென்னையில் முதல் கட்டமாக டிஜிபி அலுவலகத்தில் ஒரு எஸ்பி., 2 டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர், 8 சப்-இன்ஸ்பெக்டர், 20 காவலர்கள் என இப்படையில் இடம்பெறுவர் என அறிவித்தும் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. பேருந்து நிலையம், ரயில் நிலையம், கல்வி நிறுவனங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

பிரத்யேகமாக சீருடை
இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் நோக்கில் காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். சிறப்புப் படையில் பணிபுரிய இருக்கும் பெண் காவலர்களுக்கு பிரத்யேக சீருடை மற்றும் வாகனம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் இடம் பெறக்கூடிய பெண் காவலர்களுக்கு நேவி ப்ளூ நிற மேல்சட்டையும், காக்கி நிற கால் சட்டையும் ஆடையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. காவல் சின்னத்துடன் கூடிய கருப்பு நிற தொப்பி, கருப்பு நிற பெல்ட், காக்கி நிற லேன்யார்டு என பிரத்யேகமாக சீருடை உருவாக்கப்பட்டுள்ளது.

Related Link
கேட்ட நிதி ரூ.1000 கோடி வந்தது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கேட்ட நிதி ரூ.1000 கோடி வந்தது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
2 hrs 51 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved