உத்தரபிரதேசத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஹ்ரைச்(Bahraich) மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை கண்டறிந்த ஆங்கில ஆசிரியர் ராஜேந்திர பிரசாத், செல்போனை பிடுங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர் கத்தியால் தாக்கினார்.