இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்பாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.கோவை கொடிசியா மைதானத்தில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இளைஞர்கள் நடனமாடும் போது இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கூட்டத்திற்குள் ஓடியதால் பரபரப்பு நிலவியது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் பவுன்சர்கள் அவர்களை இழுத்து சென்று வெளியே அனுப்பினர்.