கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (( Chrystia Freeland )) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுதிய கடிதத்தில், கனடாவின் வளர்ச்சிப் பாதையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அதிக வரி விதிப்பு குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.