டிரம்பின் அதிகபட்ச வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சீன அரசு திரும்ப பெற்றுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும் என்ற அதிபர் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து, சீன விமான நிறுவனங்கள் போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் என சீன அரசு உத்தரவு பிறப்பித்தது. தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டு சீனாவுக்காக இறக்குமதி வரி 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து உள்நாட்டு விமான சேவை வழங்கும் சீன நிறுவனங்கள் போயிங் விமானங்களை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம் என சீன அரசு அனுமதி வழங்கி உள்ளதாக புளூம்பர்க் தெரிவித்துள்ளது.